இந்தியாவிற்கு அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு மலேசியர்களுக்கு அறிவுறுத்தல்

கோலாலம்பூர்:

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான எல்லை தாண்டிய தாக்குதல்களைத் தொடர்ந்து, மலேசியர்கள் இந்தியாவிற்கு அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று புதுதில்லியில் உள்ள மலேசிய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

“நேற்று (மே 7) பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடங்கியதைக் கருத்தில் கொண்டு, இந்தியாவிற்கு, குறிப்பாக பாகிஸ்தானின் எல்லையை ஒட்டியுள்ள இந்திய மாநிலங்களுக்கு, மேற்கொள்ளும் அத்தியாவசியமற்ற பயணங்களையும் உடனடியாக ஒத்திவைக்குமாறு மலேசிய தூதரகம் கடுமையாக அறிவுறுத்துகிறது,” என்று அதன் X சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

“விடுமுறை நாட்கள் அல்லது பிற அவசரமற்ற நோக்கங்களுக்கான பயணங்களும் இதில் அடங்கும்” என்று அது தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியாவில் உள்ள மலேசியர்கள் தூதரகத்திஒ பதிவு செய்து, [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் தங்கள் வருகை குறித்து தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here