கோத்தா கினபாலு:
மங்காடல், கம்போங் பூலாவ் பெனாம்பாங்கில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ சம்பவத்தில் சிக்கியதாகக் கூறப்படும் ஒரு வயதான பெண்மணியும் அவரது பேத்தியும் உடல் கருகி உயிரிழந்தனர்.

அதிகாலை 5 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட 80 வயதான ருஸ்லியா @ கிசிஸ் குன்டாமாஸ் மற்றும் அவரது 14 வயது பேத்தி ஜோயினிதா அப்துல் அலிப் ஆகியோர் ஒருவருக்கொருவர் அருகில் இறந்த நிலையில் காணப்பட்டனர்.
குறித்த வீட்டில் ஆறு குடும்ப உறுப்பினர்கள் வசித்து வந்ததாக அறியப்படுகிறது, ஆனால் ஏனைய நான்கு பேர் தீக்காயம் எதுவுமின்றி தப்பித்தனர்.

மேலும் விசாரணைகளுக்கு உதவுவதற்காக, உயிரிழந்த இருவரின் உடல்களும் குயின் எலிசபெத் I மருத்துவமனை (HQEI) தடயவியல் துறைக்கு அனுப்பப்படும் என்று மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் காசிம் முடா தெரிவித்தார்.
தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய தீயணைப்புத் துறையின் தடயவியல் குழுவின் விரிவான அறிக்கைக்காக காவல்துறை காத்திருப்பதாக அவர் கூறினார்.




















