வெள்ளம்: சுகாதார அமைச்சகம் ஊழியர் விடுமுறை முடக்கம் குறித்து மதிப்பீடு

சிகாமாட்:

வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்படும் வெள்ளத்தை சமாளிக்க நாடு முழுவதும் உள்ள தனது ஊழியர்களின் விடுமுறையை முடக்குவதற்கு முன் சுகாதார அமைச்சகம் தேவையான மதிப்பீட்டை மேற்கொள்ளும் எனவும், நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை இன்னும் கட்டுக்குள் உள்ளதால், தற்போதைய நிலையில், அவ்வாறான தொரு நடவடிக்கை தேவையில்லை எனவும் அதன் அமைச்சர் டொக்டர் ஜலிஹா முஸ்தபா தெரிவித்துள்ளார்.

“நாங்கள் தற்போது நிலைமையை கண்காணித்து வருகிறோம், மேலும் ஊழியர் களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர் நிலைகள் எளிதில் மாசுபடும் என்பதால், வெள்ளத்தின் போது உணவு தயாரிப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் அமைச்சகம் எப்போதும் விழிப்புடன் இருப்பதாக டாக்டர் ஜாலிஹா கூறினார்.

இதற்கிடையில், குறிப்பாக இளைஞர்களிடையே நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற தொற்றாத நோய் களின் (NCDs) அதிகரித்து வரும் போக்குகள் குறித்து அமைச்சகம் கவலை கொண் டுள்ளது, எனவே, சுகாதார பரிசோதனைக்கான வயது வரம்பை 40லிருந்து 18 ஆக குறைக்க அமைச்சகம் முன்முயற்சி எடுத்துள்ளது என்றார்.

இந்த முடிவுகளின் அடிப்படையில், தொடர்புடைய நோய்களின் அபாயத்தைத் தணிக்க அமைச்சகம் ஆரம்ப தலையீட்டு நடவடிக்கைகளை எடுக்க முடியும், என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here