கோத்தா கினபாலு மற்றும் லாபுவான் இடையேயான பயணிகள் படகு சேவை மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஆரம்பம்

கோத்தா கினபாலு:

பா மாநில தலைநகரையும் லாபுவானையும் இணைக்கும் பயணிகள் படகு சேவை மூன்று வருட இடைநிறுத்தத்திற்குப் பிறகு மீண்டும் செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளது.

இந்த நடவடிக்கை பொதுமக்களின் போக்குவரத்தை இலகுவாக்குவதுடன், அவர்களின் பயணத்தையும் அதிகரிக்கும் மற்றும் பிராந்தியங்களுக்கு இடையேயான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று சபா முதல்வர் டத்தோஸ்ரீ ஹாஜிஜி நூர் கூறினார்.

“இந்த சேவை மக்களுக்கு மிகவும் முக்கியமானது. இது ஒரு போக்குவரத்து பாதை மட்டுமல்ல, குடும்ப உறவுகள், கல்வி, சுற்றுலா மற்றும் நீண்டகால வணிக உறவுகளுக்கான ஒரு இணைப்பாக இருக்கிறது,” என்று அவர் இன்று கோத்தா கினபாலு துறைமுகத்தில் நடந்த தொடக்க விழாவின் போது கூறினார்.

பாதுகாப்பற்ற படகுத்துறை உள்கட்டமைப்பு, ஆபரேட்டர்களுக்கான எரிபொருள் மானியம் மற்றும் கோவிட்-19 தொற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக குறித்த படகு சேவை தடைபட்டிருந்தது.

மேலும் இந்த சேவை இந்த ஆண்டு தொடக்கத்தில் இது மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டிருந்தாலும், பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக தாமதங்களை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here