கோலாக் கிராய்:
நண்பர்களுடன் ஆற்றில் குளிக்க சென்றதாக நம்பப்படும் ஆடவர் ஒருவர் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டு, சடலமாக மீட்கப்பட்டார்.
உயிரிழந்தவர் 47 வயது அப்துல் ஹபிஸ் என அடையாளம் காணப்பட்டார்.
மேலும் அவர் விடுமுறைக்காகக் கிளாந்தானில், உள்ள சொந்த ஊருக்கு வந்திருந்த போது இந்த துயர சம்பவம் நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று கோலாக் கிராய் மாவட்டக் காவல் ஆணையர் மஸ்லான் மமட் தெரிவித்தார்.




















