முதியோர் பராமரிப்பை மேம்படுத்த சுகாதார முதலீட்டை மடானி அரசு அதிகரிக்கும்- பிரதமர்

கோலாலம்பூர்:

முதியோர் பராமரிப்பை மேம்படுத்த மலேசியா சுகாதார முதலீட்டை அதிகரிக்கும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

அதற்கேற்ப தடுப்புச் சிகிச்சை, பொது சுகாதாரக் கல்வி மற்றும் சமூக அடிப்படையிலான ஆதரவு அமைப்புகளில் அரசு அதிகம் கவனம் செலுத்தும் என்றும் அவர் சொன்னார்.

மேலும் நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கும் முறை மற்றும் நோய் வரும் முன்னர் காக்கும் பழக்கவழக்கங்கள் மூலம் அவர்களின் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கிய வாழ்வை வாழ்வதில் உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

தற்போது, மலேசியர்களின் சராசரி ஆயுட்காலம் 76 ஆண்டுகள் என்றாலும், அதில் சுமார் 67 ஆண்டுகள் மட்டுமே அவர்களாஆரோக்கியமாக இருக்கின்றனர் என தரவுகள் காட்டுகின்றன என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here