ஜோகூர்,
ஜோகூர் பாருவில் உள்ள தTanjung Langsat பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய petrochemical தொழிற்சாலையில் நடந்த ஒப் மாஹிர் ரெய்டில், 225 சட்டவிரோத தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கை, சட்டவிரோதமாக வேலை பார்க்கும் வெளிநாட்டவர்கள் குறித்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என ஜோகூர் குடிநுழைவு துறையின் இயக்குநர் Datuk Mohd Rusdi கூறினார்.
மொத்தம் 664 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் சீனா, பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நேபாளத்தை சேர்ந்த வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அந்தத் தளத்தில் பணியாற்றும் ஒரு மேலாளர் மற்றும் மனிதவள அதிகாரி ஆகிய இரண்டு மலேசியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் குடிவரவு சட்டம் 1959/63 மற்றும் குடிவரவு விதிமுறைகள் 1963ன் பிரிவுகளின் கீழ் விசாரணைக்காக Pekan Nenas குடிநுழைவு தடுப்புக் கூடத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், 6 பேருக்கு விசாரணைக்கு ஆஜராக அழைப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.





















