அமெரிக்காவில் கார் விபத்தில் 4 இந்தியர்கள் பலி

வாஷிங்டன்:

அமெரிக்காவில் சாலை பயணத்தின் போது 5 நாட்களாக காணாமல் போன இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நால்வர், ஒரு கோர விபத்தில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர்.

80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், ஜூலை 29-ம் தேதி பென்சில்வேனியாவின் பர்கர் கிங் உணவகத்தில் கடைசியாக காணப்பட்டனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்கள் புறப்பட்ட இடமான மார்ஷல் கவுண்டியில் உள்ள ‘பெலஸ் ஆஃப் கோல்ட்’ செல்லும் வழியில், மிக வறண்ட ஒரு பள்ளத்தாக்கில் கார் விழுந்து விபத்துக்குள்ளாகியிருந்தனர்.

அவர்களுடைய காரான லைட் கிரீன் டொயோட்டா கேம்ரி நசுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பகுதி மிகவும் ஆபத்தான மற்றும் அணுக முடியாத இடமாக இருந்ததால், மீட்புப் படைகள் சம்பவ இடத்தை அடைவதற்கு ஐந்து மணி நேரம் ஆனது என குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளியான ஒரு தகவலில் அவர்கள் கோயிலுக்கு சென்றுவிட்டு வரும்போது விபத்து ஏற்பட்டடாக சொல்லப்பட்டுள்ளது. விபத்தில் ஆஷா திவான், கிஷோர் திவான், ஷைலேஷ், கீதா ஆகியோர் உயிரிழந்தனர் என தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here