தாய்லாந்து-கம்போடியா இடையேயான ASEAN இன் பங்களிப்பு , ஒரு சிறந்த சாதனை – பிரதமர்

சைபர்ஜெயா,

தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையேயான விரைவான மற்றும் உடனடியான தீர்வு ASEAN அமைப்புக்கான முன்னோடி சாதனையாக உள்ளது என்று மலேசியா பிரதமர் தத்துக் செரி அன்வார் இப்ராஹிம் இன்று தெரிவித்தார்.

இது பல தரப்புகளின் பல்வேறு கட்ட ஒத்துழைப்பின் மூலம் உருவாகியுள்ளதாகவும், இரு நாடுகளின் பிரதமர்கள், வெளிநாட்டு அமைச்சர், இராணுவம் மற்றும் ASEAN தலைவர்களின் நம்பிக்கையால் இந்த முயற்சி வெற்றியடைந்ததாக பிரதமர் கூறினார்.

“இது உலக வரலாற்றில் மிக விரைவாகவும், சரியாகவும் செயல்பட்ட போர் நிறுத்தமொன்றாக இருக்கலாம்” என்றும் அவர் கூறினார்.

ஜூலை 28 முதல் அமல்படுத்தப்பட்ட இந்த நிறுத்தத்திற்கு அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் ஆதரவு தெரிவித்தாலும், நேரடி பேச்சுவார்த்தைகள் மலேசியாவின் நடுநிலைப் பாத்திரத்தில் வெற்றியடைய வாய்ப்பு பெற்றது.

தாம் ,ASEAN 58வது ஆண்டு விழாவில் தெரிவித்தபடி, இந்த நிறுத்தம் தென் கிழக்கு ஆசியாவின் புவியியல் அரசியல் அமைப்பிற்கு நல்ல தொடக்கம் என அவர் கூறினார். அதே சமயம், அடுத்த முக்கிய சவால் மியான்மர் வன்முறையை நிறுத்துவது எனறு அவர் கூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here