மக்கள் நல்வாழ்வு, ஆக்கத்திறன், சமூகத் தூய்மை GM KLANG தலைமையில் திட்டம் முன்னெடுப்பு

கிள்ளான்:

முப்பது போட்டியாளர்கள். 5 வெற்றியாளர்கள். ஒரே இலக்கு. GM KLANG ஏற்பாட்டில் ‘Fun & Freshen Up’ எனும் நிகழ்ச்சியின் வழி கிள்ளான் தாமான் பெங்காலான் பத்துவில் ஒளிவீசும் திட்டத்தை நடத்தியது. கடந்த ஆகஸ்டு 23ஆம் தேதி 2025 பூமி போராளிகள் தினத்தை முன்னிட்டு முழு உத்வேகத்துடன் இந்த நிகழ்ச்சி நடந்தேறியது.

அரச கிள்ளான் மாநகர் மன்றம் ஏற்பாடு செய்திருக்கும் எழுவோம் சாதிப்போம் என்ற திட்டத்தின் ஓர் அங்கமாக இந்த நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது. பூமி போராளிகள் சங்கம், மலேசிய மொத்த வியாபாரிகள் சங்கம் ஆகியோரின் அணுக்கமான ஒத்துழைப்புடன் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் கிள்ளான் மாநகரை மிகத் தூய்மையாக வைத்திருப்பதற்குரிய இலக்கிற்கு அடிக்கோலாக அமைந்தது. கார்ப்பரெட் துறை, அரசு சாரா இயக்கங்கள், சமூகம் என முக்கோண வியூக ஒத்துழைப்பின் சின்னமாக இத்திட்டம் விளங்கியது.

இந்நிகழ்ச்சியானது காலை 7.30 மணிக்கு தொடங்கியது. இரண்டு கட்டங்களாக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அரச கிள்ளான் மாநகர் மன்றத்தின் எழுவோம் – சாதிப்போம் திட்டத்தின் கீழ் சுவர் ஓவியங்கள், பூச்செடிகள் நடப்பட்டு தாமான் பெங்காலான் பத்து, மனமகிழ் இடங்களில் ஆரோக்கிய ஒளி வீசியது. புதுத் தோற்றத்தையும் அவை பெற்றன.

அதேசமயத்தில் பூமி போராளிகள், மொத்த வியாபாரிகள் சங்கம் ஆகியோருடன் இணைந்து GM KLANG அணி Fun & Freshen Up திட்டத்தின் கீழ் சுவர் ஓவியம் மேலும் அதன் சுற்றுப்பகுதிகளைச் சுத்தப்படுத்தும் பணியை மேற்கொண்டது . சொல்லும் போட்டியை GM KLANG நடத்தியது. ‘TAM THE EARTH WARRIOR’ எனும் தலைப்பில் நடத்தப்பட்ட போட்டியில் கிள்ளான்வாசிகள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

ஆக்கத்திறன் அணுகுமுறை, டிஜிட்டல் பரஸ்பரம் ஆகியவற்றை இன்ஸ்டாகிராம்
போட்டியாளர்கள் பூமி போராளிகள் உணர்வைப் பிரதிபலிக்கும் ஆக்கத்திறனுடன் கூடிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மிகச்சிறந்த படைப்புகளைப் பதிவேற்றம் செய்த ஐவர் வெற்றியாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. GM KLANG ஏற்பாட்டிலான வீட்டிற்குத் தேவையான பொருட்கள், நினைவுச் சின்னங்கள் ஆகியவற்றை வெற்றியாளர்கள் பெற்றுச் சென்றனர்.

கடந்த ஆண்டு கிள்ளான் பண்டார் பொட்டானிக்கில் சுமாரான நிலையில் இத்திட்டத்தை முன்னெடுத்தோம். அதுவே இந்நிறுவனத்தின் தொடக்கமாக அமைந்தது. ஒரு சிறிய முயற்சி மக்களுக்கு எவ்வளவு பெரிய தாக்கத்தைத் தரும் என்பதைக் கண்ணெதிரில் கண்டோம். அன்றைய பெருமைதான் இன்று தாமான் பெங்காலான் பத்துவில் மிகப் பிரமாண்டமான அளவில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதற்குத் தூண்டியது.

பூமி போராளிகள் சங்கம், மலேசிய மொத்த வியாபாரிகள் சங்கம், அரச கிள்ளான் மாநகர் மன்றம் ஆகிய தரப்புகளின் ஒன்றுபட மேலும் மிக நேர்த்தியான ஒத்துழைப்பு இந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு வித்திட்டது என்று GM KLANG தொடர்புத்துறை உயர்நிலை நிர்வாகி புவான் நோர்சுஹைடா ஒஸ்மான் கூறினார்.

காலை முதல் இந்நிகழ்ச்சியில் களமிறங்கிய பங்கேற்பாளர்களின் உத்வேகம் நிறைந்த மகிழ்ச்சியை அளித்தது. சுவரோவியம் மேலும் அதன் சுற்றுப்பகுதிகளைத் தூய்மைப்படுத்துவதில் மிகுந்த ஈடுபாட்டுடன் அவர்கள் பங்கேற்றனர்.இது எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும் புதிய உத்வேகத்தையும் தந்தது என்று அவர் தெரிவித்தார்.

மனமகிழ் மைதானங்கள், பொழுதுபோக்கு இடங்கள் ஆகியவற்றை சுத்தம் செய்வதில் பங்கேற்பாளர்கள் மகிழ்ச்சியுடன் களமிறங்கி ஈடுபட்டது மக்களுக்குத் தொண்டாற்றும் அவர்களின் உணர்வை மிகத் தெளிவாகப் பிரதிபலித்தது. இந்நிகழ்ச்சி வருங்காலங்களில் இன்னும் பெரிய அளவிலும் அதிகமானவர்கள் பங்கேற்பிலும் நடைபெறும் என்பது தன்னுடைய நம்பிக்கையாக இருக்கிறது.

மேலும் ஆண்டுக்காண்டு இந்தச் சமூக உணர்வு மேலோங்கி வருவது GM KLANG சமூகக் கடப்பாட்டிற்கு மிகப்பெரிய வெற்றியாக அமைந்திருக்கிறது என்று புவான் நூர்சுஹைடா ஒஸ்மான் குறிப்பிட்டார்.
கிள்ளானையும் அதன் சுற்றுப்பகுதிகளையும் தூய்மைப்படுத்தி பொதுமக்களின் நல்வாழ்வுக்கு வித்திடும் GM KLANG மக்கள் நலத் திட்டங்களுக்கு ஆதரவு பெருகி வருவது மகிழ்ச்சியாகவும் மனநிறைவாகவும் உள்ளது என்று அவர் மேலும் சொன்னார்.

மேலும் தூய்மையான, பசுமையான, எழுச்சிமிக்க பொதுமக்கள் பொழுதுபோக்கு இடத்தை உருவாக்கும் தங்கள் நிறுவனத்தின் இலக்கு வெற்றியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here