சபா: வெறிநாய்க்கடிக்கு மேலும் ஒரு குழந்தை பலி!

கோலாலம்பூர்:

பிந்துலுவைச் (Bintulu) சேர்ந்த ஆறு வயது இந்தோனேசியச் சிறுமி, வெறிநாய் கடித்ததால் உயிரிழந்தார். கடந்த ஜூலை 4-ஆம் தேதி காய்ச்சல், இருமல், வயிற்று வலியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்தச் சிறுமி, பின்னர் இறந்ததாகச் சபா மாநிலச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

சிறுமியை கடித்த வெறி நாய், வெறிநோய் Rabies பாதிப்புக்கு உட்பட்டிருந்தது சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது.

இது, இந்த ஆண்டின் இரண்டாவது மனித வெறிநோய் Rabies சம்பவம் ஆகும்.

2017-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை, 85 வெறிநோய் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதில், 78 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, வெறிநாய்கள், பூனைகள் கடித்தால், உடனடியாக, கடிபட்ட இடத்தை சுத்தமாக தண்ணீரில் கழுவ வேண்டும்.

மேலும், உடனடியாக, அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும்.

2025-ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை, சபா மாநிலத்தில் 12,000-க்கும் மேற்பட்ட விலங்குகள் கடித்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதில் பெரும்பாலான சம்பவங்கள் நாய்கள், பூனைகள் கடித்தவை ஆகும். எனவேதான் விலங்குகளின் கடி, ஆபத்தானது என்று அதிகாரிகள் தொடர்ந்து எச்சரித்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here