இரண்டாம் உலகப் போரின் வெடிகுண்டு: லாகாட் டத்துவில் செயலிழப்பு!

கோலாலம்பூர்:

லாகாட் டத்துவில், சுங்கை செகாமா (Sungai Segama) ஆற்றின் கரையில், இரண்டாம் உலகப் போரின்போது பயன்படுத்தப்பட்ட உயிருள்ள வெடிகுண்டு ஒன்று, இன்று காலை 11.33 மணிக்கு, காவல்துறையின் வெடிகுண்டு நிபுணர்களால் பாதுகாப்பாகச் செயலிழக்கப்பட்டது.

இந்தச் சம்பவத்தில், எந்தவிதமான காயங்களும், சேதங்களும் ஏற்படவில்லை.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, 52 வயதுடைய மீனவர் ஒருவரால், இந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, சபா, லாகாட் டத்து மாவட்டங்களைச் சேர்ந்த நான்கு அதிகாரிகளும் 17 வீரர்களும், இந்தச் செயலிழப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here