குலதெய்வ தோஷத்தை நீக்கும் தீப வழிபாடு

எந்த ஒரு தெய்வத்தை வழிபாடு செய்வதாக இருந்தாலும் அந்த வழிபாட்டின் முழுமையான பலனை பெற வேண்டும் என்றும் அந்த வழிபாட்டில் எந்தவித தடைகளும் ஏற்படக்கூடாது என்றும் விநாயகர் பெருமானை வழிபாடு செய்வோம். அப்படிப்பட்ட விநாயகர் பெருமான் ஆலயத்தில் தான் குலதெய்வ தோஷத்தை நீக்கக்கூடிய தீப வழிபாட்டை நாம் செய்யப் போகிறோம். அதனால் தங்களுக்கு குலதெய்வம் எது என்று தெரியாது என்று கூறினாலும் இந்த வழிபாட்டை செய்யும் பொழுது அந்தக் குலதெய்வத்தின் அருளை உங்களால் பரிபூரணமாக பெற முடியும்.
இந்த தீப வழிபாட்டை திங்கட்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை இந்த மூன்று கிழமைகளில் ஏதாவது ஒரு கிழமையில் செய்வது சிறப்பு. அருகில் இருக்கக்கூடிய விநாயகர் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் பொழுது ஒரு தலைவாழை இலை, குங்குமப்பூ, கோதுமை மாவால் செய்யப்பட்ட இரண்டு விளக்குகள், நல்லெண்ணெய், பஞ்சுத் திரி போன்றவற்றை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். முக்கியமான குறிப்பு. கோதுமை மாவு விளக்கு என்றதும் கடையில் விற்கக்கூடிய கோதுமை மாவில் செய்யாமல் கோதுமையை வாங்கி காய வைத்து அரைத்து மாவாக்கி அதில் விளக்கு செய்வதுதான் சிறப்பு.
விநாயகப் பெருமானுக்கு முன்பாக வாழை இலையை விரித்து அதில் தயார் செய்து வைத்திருக்கும் கோதுமை விளக்கை வைக்க வேண்டும். அந்த கோதுமை விளக்கிற்கு மஞ்சள் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். அந்த விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு விநாயகப் பெருமானை பார்த்தவாரோ அல்லது கிழக்கு திசை பார்த்தவாரோ தீபம் ஏற்ற வேண்டும். பிறகு அந்த தீப எண்ணெயில் ஒரு சிட்டிகை அளவு குங்குமப்பூவை போட வேண்டும்.
இவ்வாறு போட்டு முடித்துவிட்டு விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் மலர்கள் போன்றவற்றை சமர்ப்பணம் செய்து தங்களின் பெயரில் அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நமக்கு இருக்கக்கூடிய குலதெய்வ தோஷம் முற்றிலும் நீங்குவதோடு, குலதெய்வத்தின் அருளை பரிபூரணமாக பெறலாம். மேலும் தன ஆகர்ஷணமும் உண்டாகும்.
முழு மனதோடு ஒரே ஒருமுறை விநாயகப் பெருமானின் ஆலயத்தில் இந்த தீபத்தை ஏற்றி வழிபாடு செய்து பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றம் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here