சபா தேர்தல் : நவ.15 வேட்புமனு தாக்கல் – நவ.29 வாக்களிப்பு

கோத்தா கினபாலு:

சபா மாநிலத்தின் 17ஆவது சட்டமன்ற தேர்தல் அடிப்படையில் நவம்பர் 15ஆம் தேதி வேட்புமனு தாக்கலும் 25ஆம் தேதி தொடக்கக்கட்ட வாக்களிப்பும் 29ஆம் தேதி பொது வாக்களிப்பும் நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதே சமயம் இந்த தேர்தல் உறுதி ஆவணமும் வெளியிடப்பட்டுள்ளது. இம்மாதம் 6ஆம் தேதி சபா சட்டமன்றம் கலைக்கப்பட்டதை அடுத்து அங்கு தேர்தல் நடத்துவது குறித்து காலை 10 மணிக்கு தொடங்கபட்ட சிறப்பு கூட்டத்திற்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகின்றது என்று சபா மத்திய அரசாங்க நிர்வாக வளாகத்தில் நடைபெற்த செய்தியாளர் சந்திப்பில் தேர்தல் ஆணைய தலைவர் டத்தோஸ்ரீ ரம்லான் ஹாரூன் தெரிவித்தார்.

சபாவிள் உள்ள 25 நாடாளுமன்ற தொகுதிகள் கீழ் 73 சட்டமன்ற தொகுதிகளுக்கு இம்முறை தேர்தல் நடத்தப்படுகின்றது என்பது குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here