கோலாலம்பூர்:
கடந்த 2005 முதல் மருத்துவ உதவி நிதி (Medical Assistance Fund) மூலம் மொத்தம் 84,500 நோயாளிகள் பல்வேறு மருத்துவ உதவிகளைப் பெற்றுள்ளனர் என நிதியமைச்சர் II டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் தெரிவித்தார்.
இதுவரை அங்கீகரிக்கப்பட்ட மொத்த உதவித் தொகை RM793.7 மில்லியன் ஆகும்.
அதில், இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை மட்டும் 3,800க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டன, அவற்றின் மதிப்பு RM56.2 மில்லியன் ஆகும்.
“இந்த நிதி, குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு மருத்துவச் செலவுகள், சிகிச்சை உபகரணங்கள், மறுவாழ்வு சாதனங்கள் மற்றும் மருந்துகளுக்கான முழு அல்லது பகுதி நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது,”என்று அமீர் ஹம்சா கூறினார்.
அதே நேரத்தில், இந்த உதவி சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற 2026 விநியோக மசோதா குழு அளவிலான விவாதத்தில் பேசும் போது, அமீர் ஹம்சா,மருத்துவ நிதி பல துறைகளில் — இருதயவியல் (Cardiology), எலும்பியல் (Orthopaedics), சுவாச மருத்துவம் (Respiratory medicine), அறுவை சிகிச்சை (Surgery) மற்றும் மறுவாழ்வு (Rehabilitation) போன்ற துறைகளில் உதவிகளை வழங்கி வருவதாக அமீர் ஹம்சா தெரிவித்தார்.





















