கடைசி நேர தீபாவளி ஷாப்பிங்! திணறும் Bukit Jalil

கோலாலம்பூர்:

நாளைய தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புக்கிட் ஜாலீலில் உள்ள பஜாரில் கடைசி நேர பொருட் கொள்வனவுக்காக கூட்டம் அலைமோதுகிறது. கடைசி நேரத்தில் வர்த்தகர்கள் விலையை குறைத்ததால், இறுதி கொள்முதல் செய்யும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்துசேர்ந்தனர்.

சிறந்த தேர்வுகள் மற்றும் விற்பனையாளர்களுடன், குறிப்பாக கடைசி நேரத்தில் குறைந்த விலையில் பேரம்பேசுதல் என சுவாரஸ்யமான பல சம்பவங்கள் அங்கு நடை பெறுகின்றன.

வழக்கம் போல், நான் வாங்கியவற்றிலிருந்து இவ்வளவு பணத்தை மிச்சப்படுத்த முடி யும் என்று கருதுவதால், கடைசி நிமிட ஷாப்பிங் செய்வேன் என்கிறார் ஒரு வாடிக் கையாளர். கடைசி நேரத்தில் ஷாப்பிங் செய்ததால் 70 சதவீதம் வரை தள்ளுபடி கிடைத்ததாக அவர் கூறினார்.

நாங்கள் கூடுதல் தள்ளுபடிகளை வழங்கினோம். உதாரணமாக, RM180 விலையுள்ள ஆடைககளை RM50 ஆக குறைத்தோம், மக்களுக்கு மகிழ்ச்சிதான், ஆனால் எங்க ளுக்கு இலாபமில்லை என்று நான் நினைக்கிறேன் என்கிறார் ஒரு கடைக்காரர்.

கோவிட்-19 கட்டுப்பாடுகள் முடிவடைந்த பின்னர் தீபாவளியை கொண்டாடும் வாய்ப்பு மக்களுக்கு கிடைத்ததை அடுத்து, இந்த ஆண்டு விற்பனை சிறப்பாக இருப் பதாக பல வியாபாரிகள் கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here