பினாங்கு:
புக்கிட் மெர்தாஜாம் ரயில் நிலையத்தில் உள்ள திறந்தவெளி மரக்கிடங்கு ஒன்றில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பில் தீயணைப்புத் துறைக்கு இரவு 8:10 மணிக்கு அவசர அழைப்பு வந்தது என்றும், தீயணைப்பு வீரர்களின் விரைவான செயல்பாட்டினால் இரவு 8:24 மணிக்கு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என்றும் பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குனர் ஜான் சகுன் தெரிவித்துள்ளார்.
இரவு 8:50 மணிக்கு தீ முற்றிலும் அணைக்கப்பட்டு, அதைத் தொடர்ந்து கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த இந்த விபத்தில் சுமார் 30 சதவீத மரங்கள் சேதமடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.




















