மோட்டார் சைக்கிள் பசு மாடு மீது மோதியதில் உயிரிழந்த தோட்டத் தொழிலாளி

ஈப்போ: இன்று அதிகாலை சுமார் 2.40 மணியளவில், பத்து காஜா அருகே சாலையின் நடுவில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த தோட்டத் தொழிலாளி ஒருவர் பசு மாடு மீது மோதியதில் உயிரிழந்தார்.

பத்து காஜா மாவட்ட காவல்துறைத் தலைவர் நூர் எஸ்வான் முகமது கூறுகையில், பத்து 7, ஜாலான் தஞ்சோங் துவாலாங் என்ற இடத்தில், 30 வயதான பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஷா ரின் புசு, பலத்த காயங்களால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பாதிக்கப்பட்டவர் கோப்பெங்கிலிருந்து கம்போங் ஏர் டெனாக் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தார். சாலையின் நடுவில் திடீரெனத் தோன்றிய ஒரு பசுவை அவரால் தவிர்க்க முடியாததால், மோதல் ஏற்பட்டது,” என்று நூர் எஸ்வான் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here