மோனாஷ் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து, சுபாங் ஜெயாவில் உள்ள அப்பல்கலைக்கழகம் பாதுகாப்பானது என அறிவிக்கப்பட்டுள்ளது. விரிவான பாதுகாப்பு சோதனைக்குப் பிறகு, சுபாங் ஜெயா காவல் தலைமையகம் நிலைமை தெளிவாக உள்ளதாகவும், வளாகம் இன்று பாதுகாப்பாக மீண்டும் செயல்படத் தொடங்கலாம் என்றும் உறுதிப்படுத்தியதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
ஜோகூர் பாருவில் உள்ள மோனாஷ் மருத்துவப் பள்ளி மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டிருக்கும் என்று அது ஒரு அறிக்கையில் கூறியுள்ளது. நேற்று இரவு, “அவசர நிலை” காரணமாக அனைத்து மாணவர்களையும் உடனடியாக வளாகத்தை விட்டு வெளியேறுமாறு மோனாஷ் பல்கலைக்கழக மாணவர் சங்கம் அறிவுறுத்தியது.
அவசர மீட்புக் குழுக்களும் பல்கலைக்கழக நிர்வாகமும் நிலைமையைச் சரிசெய்யும் வரை, வளாகம் சுமார் ஐந்து மணி நேரம் மூடப்பட்டிருக்கும் என்று அந்த அமைப்பு கூறியது. அதிகாரப்பூர்வமாக நிலைமை சீராகிவிட்டது என்ற அறிவிப்பு வரும் வரை, தயவுசெய்து வளாகத்தை உடனடியாக விட்டு வெளியேறுங்கள், எந்தக் கட்டிடத்திலும் மீண்டும் நுழைய முயற்சிக்காதீர்கள் என்று அது ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியிருந்தது.ஆனால் அப்பதிவு பின்னர் நீக்கப்பட்டது.









