PN-க்கு தனது உறுதிப்பாட்டை நிலை நிறுத்திய கெராக்கான்

 பெர்சத்துவுடனான உறவைத் துண்டிப்பதாக பாஸ் நேற்று அறிவித்த போதிலும், பெரிக்காத்தான் நேஷனலுக்குத் தாங்கள் தொடர்ந்து உறுதியுடன் இருப்பதாக கெராக்கான் தெரிவித்துள்ளது. PN-க்குள் பாஸ் மற்றும் பெர்சத்து ஆகிய இரு கட்சிகளின் பங்களிப்புகளையும், அவற்றின் பங்கையும் தங்கள் கட்சி மதிப்பதாகவும், நேற்றைய நிகழ்வு குறித்துக் கருத்து தெரிவிப்பதற்கு முன்பு இரு கட்சிகளிடமிருந்தும் விளக்கம் எதிர்பார்க்கப்படுவதாகவும் கெரக்கான் தலைவர் டொமினிக் லாவ் கூறினார்.

ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலானில் வரவிருக்கும் மாநிலத் தேர்தல்களைக் குறிப்பிட்டு, ‘PN-க்குள் உள்ள அனைத்துக் கட்சிகளும் நமக்கு முன்னால் உள்ள பெரிய பணியில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது’ என்று அவர் கூறினார். அனைத்து இனங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த மலேசியர்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு கூட்டணியாக பெரிகாத்தான் நேஷனலை வலுப்படுத்துவதில் கெரக்கான் தொடர்ந்து ஆக்கப்பூர்வமான பங்கை வகிக்கும். அதே நேரத்தில், அரசியல் ஸ்திரத்தன்மை, கொள்கை ரீதியான தலைமை மற்றும் மக்களின் நலன்களை எல்லாவற்றிற்கும் மேலாக நிலைநிறுத்தும் என்று PN துணைத் தலைவர் கூறினார்.

2020இல் பெர்சத்து மற்றும் பாஸ் கட்சிகளால் கூட்டாக உருவாக்கப்பட்ட கூட்டணியான பிஎன்-ல், கெராக்கான் மற்றும் மலேசிய இந்திய மக்கள் கட்சியும் அடங்கும். பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங், பெர்சத்துவுடனான தனது அரசியல் ஒத்துழைப்பை முடிவுக்குக் கொண்டு வருவதாக நேற்று இரவு அறிவித்ததைத் தொடர்ந்து, பிஎன்-ன் எதிர்காலம் குறித்த கவலைகள் எழுந்தன. வரவிருக்கும் மாநிலத் தேர்தல்களையும் அடுத்த பொதுத் தேர்தலையும் எதிர்கொள்வதற்காக, “உம்மாவை ஒன்றிணைக்கும்” நோக்குடன் பாஸ் ஒரு புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கும் என்று ஹாடி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here