நெகிரி செம்பிலான் தேர்தல் களம்: 19 பிரசார நிகழ்வுகளுக்கு காவல்துறை அனுமதி – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

சிரம்பான்:

நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வேட்பாளர்களின் பிரசார நிகழ்வுகளுக்குக் கடுமையான நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி அளித்துள்ளது. தகுதியான விதிமுறைகளை முழுமையாக நிறைவு செய்த 19 பிரசார நிகழ்வுகளுக்குச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தற்போது அனுமதி வழங்கியுள்ளனர்.

பிரசார நிகழ்வுகள் அனைத்தும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படாத வண்ணம் காவல்துறையின் தீவிர கண்காணிப்பில் இருக்கும் என்று, நெகிரி செம்பிலான் மாநிலக் காவல்துறைத் தலைவர் டத்தோ அல்சாஃப்னி அமாட் (Datuk Alzafny Ahmad) கூறினார்.

இதுவரை தேர்தல் பாதுகாப்பு நிலைமை மிகவும் சுமுகமாகக் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக ஒரே ஒரு புகார் மட்டுமே பதிவாகியுள்ளது; அது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் சொன்னார்.

தேர்தல் முடியும் வரை பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் தொடர்ந்து வலுப்படுத்தப்படும். சட்டத்தை மீறுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது எவ்வித சமரசமுமின்றி சட்ட நடவடிக்கை பாயும் என அவர் எச்சரித்தார்.

கடந்த ஜூன் 5-ஆம் தேதி நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி: ஜூலை 28: முன்கூட்டிய வாக்களிப்பும் (Early Voting), வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி பொதுவாக்களிப்பும் (Polling Day) நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here