கோலாலம்பூர்:
இந்தோனேசியாவின் வட சுமத்ரா பகுதியில் ஏற்பட்ட மிதமான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, மலேசிய தீபகற்பத்தின் மேற்கு கடலோரப் பகுதிகளில் லேசான அதிர்வுகள் உணரப்பட்டன.
இன்று பிற்பகல் 12.18 மணியளவில் 5.7 ரிக்டர் ஆகப் பதிவான இந்நிலநடுக்கத்தின் மையம், இந்தோனேசியாவின் லங்சா (Langsa) நகருக்கு தென்மேற்கே 55 கிலோமீட்டர் தொலைவில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்திருந்ததாக மலேசிய வானிலை ஆய்வு மையம் மெட் மலேசியா தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்தால் மலேசியாவின் மேற்குப் பகுதி மக்கள் அதிர்வுகளை உணர்ந்த நிலையில், நிலநடுக்கத்தின் தாக்கம் மற்றும் பரவல் குறித்து ஆய்வு செய்வதற்காக அதிர்வுகளை உணர்ந்த பொதுமக்கள் தங்கள் கருத்துக்களைத் மெட் மலேசியாவின் அதிகாரப்பூர்வ ஆய்வறிக்கை படிவம் (Survey Form) மூலம் தெரிவிக்குமாறு வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.





















