‘புடி மடானி RON95’ எரிபொருள் மானியத் திட்டம்: 14 மில்லியனுக்கும் அதிகமான மலேசியர்கள் பயன்! – நிதியமைச்சர் அமீர் ஹம்சா தகவல்

கோலாலம்பூர்:

மலேசியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ‘புடி மடானி RON95’ இலக்கிடப்பட்ட எரிபொருள் மானியத் திட்டத்தின் கீழ், நாட்டில் தகுதியுள்ள 16.7 மில்லியன் மலேசியர்களில் 14.2 மில்லியனுக்கும் அதிகமானோர் வெற்றிகரமாகப் பயனடைந்துள்ளதாக இரண்டாவது நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அஸிஸான் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் கேள்வி-பதில் அமர்வின் போது உரையாற்றிய அவர், இத்திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் அதன் தரவுகள் குறித்த விரிவான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

அக்டோபர் 2025 – ஜூன் 2026 காலப்பகுதியின் புள்ளி விபரங்களை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்டதில், மலேசியப் பயனர்களின் சராசரி RON95 பெட்ரோல் நுகர்வு மாதம் ஒன்றுக்கு 100 லிட்டராக உள்ளது.

நாட்டின் மொத்தப் பயனர்களில் 1 சதவீதத்திற்கும் குறைவானவர்களே மாதத்திற்கு 200 லிட்டருக்கும் அதிகமான RON95 எரிபொருளைப் பயன்படுத்துவதாகப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெய் (Crude oil) விலையின் மாற்றங்களைப் பொறுத்து, இந்த Budi95 திட்டத்தின் மூலம் மலேசிய அரசாங்கத்திற்கு ஆண்டுதோறும் 2.5 பில்லியன் முதல் 4 பில்லியன் ரிங்கிட் வரை நிதி சேமிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here