கோலாலம்பூர்:
மலேசியாவின் 5 மாநிலங்களில் இன்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 14) காலை 11 மணி வரை இடி, மின்னல், கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த வானிலை வட மாநிலங்கள் மற்றும் மத்தியப் பகுதிகளை உள்ளடக்கிய இடங்களில் நிலவும் என இன்று காலை 8:00 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
பெர்லிஸ் மற்றும் பினாங்கு மாநிலம் முழுவதிலும் கடுமையான வானிலை எதிர்பார்க்கப்படுகிறது. கெடா: பண்டார் பாரு, கோலா மூடா, கூலிம், பாலிங், சிக், யானி, பெந்தோங், குபாங் பாசு, கோத்தா ஸ்டார் மற்றும் பொகோக் சேனா ஆகிய பகுதிகள், பேராக்கின் கெரியான், செலாமா, லாரூட் மாத்தாங், மஞ்சோங் மற்றும் பாகான் டத்தோ ஆகிய பகுதிகள், மற்றும் சிலாங்கூரின் சபாக் பெர்ணம் மற்றும் கோலா சிலாங்கூர் ஆகிய பகுதிகள்ஆகிய பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு மணி நேரத்திற்கு 20 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவு பதிவாகக்கூடும் அல்லது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படும் போது வானிலை ஆய்வு மையம் இத்தகைய குறுகிய கால இடி மின்னல் எச்சரிக்கைகளை வெளியிடுகிறது. என்வே பொதுமக்கள் அவசியமின்றி வெளியே செல்வதைத் தவிர்க்குமாறும், பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
























