கெடாவில் உணவகத்திற்கு வெளியே ஆடவர் வெட்டிக் கொலை!

கோலா கெத்தில், 

கெடா, கோலா கெத்தில் ஜாலான் பெக்கான் லாமாவிலுள்ள ஓர் உணவகத்திற்கு வெளியே நான்கு ஆடவர்களால் தாக்கப்பட்ட 43 வயது உள்ளூர் ஆடவர் உயிரிழந்தார்.

நள்ளிரவு 12.15 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் பலத்த வெட்டுக் காயங்களுக்கு இலக்கான அந்த ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கெடா மாநில போலீஸ் தலைவர் அட்ஸ்லி அபு ஷா தெரிவித்தார்.

உயிரிழந்த ஆடவரின் உடலில் 16 வெட்டுக் காயங்கள் காணப்பட்டதாக அவர் கூறினார்.

பழிவாங்கும் நோக்கமும் போட்டிக் கும்பல்களுக்கு இடையிலான ஆதிக்கப் பிரச்சினையுமே இக்கொலைக்குக் காரணம் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

புரோட்டோன் பெர்சோனா காரிலிருந்து பாராங் கத்திகளுடன் இறங்கிய நான்கு ஆடவர்கள், சம்பந்தப்பட்ட ஆடவரைத் துரத்திச் சென்று சரமாரியாகத் தாக்கியதைப் பொதுமக்கள் கண்டதாகவும் அவர் கூறினார்.

இச்சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த பொதுமக்கள் 999 அவசர அழைப்பு எண்ணுடன் தொடர்புகொண்டு போலீஸ் விசாரணைக்கு உதவுமாறு அட்ஸ்லி கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here