பெட்டாலிங் ஜெயா, ஜூலை 21:
கோவிட் -19 சிகிச்சைக்காக 40- 50 வயதிற்குட்பட்டவர்களே இப்போது தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) நுழைவதற்கான அதிகமாக அனுமதிக்கப்படுகின்றார்கள் என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
இது தேசிய நெருக்கடி தயாரிப்பு மற்றும் மறுமொழி மையம் (CBRC) மற்றும் மருத்துவமனை சேவைகள் ஆகியவற்றின் அறிக்கைகளின் அடிப்படையில் இனங் காணப்பட்டதாகவும் கூறினார்.
“இந்த நிலைமையை அடிப்படையாக கொண்டு நோக்கும் போது, மூத்த குடிமக்கள் (60 வயதிற்கு மேற்பட்டவர்கள்) மத்தியில் கோவிட் -19 நோய்த்தொற்றின் அபாயத்தை குறைக்க இந்த தடுப்பூசி உதவியது என்பதை நிரூபிக்கிறது” என்றும் அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
18 முதல் 59 வயதிற்குட்பட்ட மலேசியர்கள் தடுப்பூசிக்கு பதிவு செய்து அவர்களின் முன்பதிவுகளை வைத்திருக்க வேண்டும் என்றும் அவற்றை உரிய நாட்களில் சென்று செலுத்திக்கொள்ளவும் வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தொடர்ச்சியாக அதிகரித்து வரும் தினசரி தொற்றுக் குறித்து கருத்து தெரிவித்த நூர் ஹிஷாம், மருத்துவமனை படுக்கைகள், குறிப்பாக ICU வில் உள்ளவை கோவிட் -19 நோயாளிகளின் அதிகரிப்ப்பால் நிரம்பியதாக ஒப்புக்கொண்டார்.
இன்றைய புதிய தொற்றுக்களில் (11,985) 2.4% 3, 4, 5 வகைகளிலும், மீதமுள்ள 97.6% வகை 1 மற்றும் 2 பிரிவுகளிலும் இருப்பதைக் குறிப்பிட்டு, இந்த நிலைகள் முதலில் வைரஸைக் கண்டறிந்தபோது அவர்களின் மருத்துவ நிலையை அடிப்படையாகக் கொண்டது என்றார்.
“அவர்களில் சிலர் நோய்த்தொற்று காலம் முழுவதும் ஒரே பிரிவில் இருக்கிறார்கள், இருப்பினும் அவர்களின் உடல் நிலைகளுக்கு ஏற்றவாறு அவர்கள் குறைந்த வகைக்கு மேம்படுவதன் மூலமோ அல்லது உயர் வகைக்கு மோசமடைவதன் மூலமோ மாறுகின்றனர் என்றும் அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.





















