பூர்வக்குடி இசைக்கலைஞர்கள் 10 பேர் சுட்டுக் கொலை
மெக்சிகோ -மெக்சிகோவில் பூர்வக்குடி இனத்தைச் சேர்ந்த பத்து இசைக் கலைஞர்களைச் சுட்டுக் கொன்ற துப்பாக்கிக்காரர்கள் அதன்பின் அவர்களின் உடல்களைத் தீயிட்டு எரித்தனர். குவாரேரோ மாநிலத்தின் சிலாப்பா எனும் நகரில் அந்த கொடூரச் சம்பவம்...
அரச பட்டத்தை துறந்தனர் இளவரசர் ஹெரி தம்பதி
லண்டன் -பிரிட்டிஷ் இளவரசர் ஹெரியும் அவரின் துணைவியார் மேஹனும் இனியும் அரச குடும்ப உறுப்பினர்கள் அல்லர் என்று பக்கிங்ஹாம் மாளிகை நேற்று அறிவித்தது.
தாங்கள் அரண்மனை வாழ்க்கையைத் துறந்து சாதாரண மக்கள்போல் வாழப்போவதாக அத்தம்பதி...
பீஜியைத் தாக்குகிறது பலத்த சூறாவளி!
சுவா -பசிபிக் பெருங்கடல் தீவான பீஜியை பலத்த சூறாவளி தாக்கி வருகிறது. அத்தீவை மூன்று வாரங்களுக்குள் தாக்கும் இரண்டாவது சுழல்காற்று இதுவாகும்.சைக்கிளோன் டீனோ எனும் அச்சுழல்காற்று நேற்று வெள்ளிக்கிழமை தாக்கத் தொடங்கியது. அதனையடுத்து...
லெபனானில் கலவரம்: 35 பேர் காயம்!
பெய்ரூட் -லெபானின் பெய்ரூட் நகரிலுள்ள பிரதான போலீஸ் முகாமொன்றுக்கு முன்புறம் அரசு எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே நிகழந்த மோதலில் முப்பத்தைந்து பேர் காயமுற்றனர். அதன் தொடர்பில் இருபது பேர் கைது செய்யப்பட்டனர்.காயமடைந்தவர்களுள்...
விமானத்தை வீழ்த்தியது ஈரான் பாய்ச்சிய எறிபடை!
ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக மேலை நாடுகள் தகவல்
வாஷிங்டன் -ஈரான் பாய்ச்சிய எறிபடையினால்தான் உக்ரேனிய விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்று மேலை நாட்டுத் தலைவர்கள் நேற்று அறிவித்தனர். அந்த விமானம் தவறாக...
உக்ரேன் விமானம் நடுவானில் தீப்பற்றியது!
176 பேர் பலி!
துபாய் -உக்ரேன் நாட்டு விமானம் தரையில் விழுந்து நொறுங்குவதற்கு முன்பு அதில் தீப்பற்றியிருந்தது என்று புலன்விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஈரானியத் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இமாம் கோமேனி விமான நிலையத்திலிருந்து அந்த விமானம்...
ஈரானைத் தாக்க மாட்டோம்!
டிரம்பின் அறிவிப்பினால் பதற்றம் தணிந்தது
வாஷிங்டன் -ஈரானுடன் ராணுவ மோதலில் ஈடுபடப்போவதில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்திருப்பதைத் தொடர்ந்து அவ்விரு நாடுகளுக்கிடையே நிலவி வந்த உச்சகட்டப் பதற்றம் தணிந்துள்ளது.ஈராக்கில் உள்ள அமெரிக்கப்...
அரச குடும்பத்தினர்போல் செயல்படப் போவதில்லை!
பிரிட்டிஷ் இளவரசர் தம்பதி அதிரடி அறிவிப்பு
லண்டன் -மூத்த அரச குடும்பத்தினர் எனும் அந்தஸ்தை குறைத்துக் கொண்டு ஓர் அடக்கமான வாழ்க்கையை வாழ தாங்கள் முடிவு செய்துள்ளதாக பிரிட்டிஷ் இளவரசர் ஹெரியும் அவரின் துணைவியார்...
ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு அணு ஆயுதச் சோதனை காரணமா?
தெஹ்ரான் -ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு அந்நாடு நடத்திய அணு ஆயுதச் சோதனை காரணமாக இருக்கலாம் என உலக நாடுகள் சந்தேகம் தெரிவித்துள்ளன. சில தினங்களுக்கு முன் அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் ஈரான்...
ஈரான் எறிபடைத் தாக்குதலில் 80 அமெரிக்கர்கள் பலி!
தெஹ்ரான் -ஈராக்கில் அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ஈரான் நடத்திய எறிபடைத் தாக்குதலில் எண்பது அமெரிக்க பயங்கரவாதிகள் பலியாகினர் என்று ஈரானிய அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.ஈரானிய ராணுவம் தொடர்ச்சியாக ஏவிய எறிபடைகளால் அமெரிக்காவின்...






















