
லங்காவி :
நிபந்தனை இயக்கக் கட்டுப்பாட்டு ஆணை (சி.எம்.சி.ஓ) முடிவடையும் வரை லங்காவி-கோலா கெடா-லங்காவி பாதை சம்பந்தப்பட்ட பெர்ரி படகு சுற்றுப் பயணம் இன்று முதல், ஒரு நாளைக்கு ஒரு பயணத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று மலேசிய கடல் துறை வடக்கு பிராந்திய இயக்குநர் மொகமட் ஹபீஸ் அப்துல் மஜிதட் தெரிவித்துள்ளார்.
படகு சேவை விண்ணப்பத்திற்கு மலேசிய கடல்துறை ஒப்புதல் அளித்துள்ளது. அதனால் இன்று முதல், லங்காவி-கோலா கெடா கோலா கெடா-லங்காவி பாதைக்கு ஒரே ஒரு பயணம் மட்டுமே இருக்கும்.
லங்காவியில் இருந்து கோலா கெடா வரையிலான படகு காலை 10 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது, அதே நேரத்தில் கோலா கெடாவிலிருந்து லங்காவி வரை மாலை 5 மணிக்கு படகு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அட்டவணை இன்று முதல் இறுதி வரை நடைமுறைக்கு வருகிறது.
இது தவிர, சி.எம்.சி.ஓ காலத்தில் கோலா பெர்லிஸ்-லங்காவி-கோலா பெர்லிஸ் பாதை சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை நிறுத்தவும் ஆபரேட்டர் விண்ணப்பித்ததாக மொகட் ஹபீஸ் கூறினார்.