கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக நடைபெற உள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஆகஸ்டு 1ஆம் தேதி தொடங்குகிறது.
இந்த தொடரில் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் 9 இடங்களைப் பிடித்த அணிகள் மட்டும் பங்கேற்கிறது. ஆகஸ்ட் 1இல் தேதி தொடங்கி தொடர்ந்து 2 ஆண்டுகளில் இந்த 9 அணிகளுக்கு இடையே நடைபெறும்.
27 தொடர்களின் முடிவில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள், சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்காக ஜூன் 2021இல் இங்கிலாந்தில் நடக்கும் இறுதி ஆட்டத்தில் மோதும்.
9 அணிகளும் சொந்த மண்ணில் 3 டெஸ்ட் தொடர் மற்றும் வெளிநாட்டில் 3 டெஸ்ட் தொடர் என்ற அடிப்படையில் விளையாட உள்ளன. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் ங்ாம்பியன்ஷிப் தொடரில் விளையாடவுள்ளன.