சோங்கிங்,
சீனாவில் பெண் ஒருவர் தன் தோழியோடு வீடியோ உரையாடலில் கைகளை நீட்டியவாறே எழுந்து அமரும்(Squat) சவாலை மேற்கொண்டார்.
போட்டி போட்டுக் கொண்டு இருவருமே 1,000 முறை அப்போட்டியைச் செய்தனர். மறுநாள் தாங் (வயது 19) எனும் அந்த பெண்ணிற்குக் கால்களில் வலி ஏற்பட்டுள்ளது. மூன்றாவது நாளில் கால்களை முழுமையாக அசைக்கமுடியாமல் போனது. மேலும் அவளின் சீறுநீரின் நிறம் மாறவே பயந்து போன அவள் தன் நண்பரோடு மருத்துவமனைக்குச் சென்றார்.
பரிசோதனையில் அவளின் கால் தசைகள் முழுமையாக செயலிழந்து போனதாக மருத்துவர்கள் அறிவித்தனர். மேலும் அவளுக்கு சிறுநீரகக் கோளாறும் ஏற்படும் அபாயமும் இருப்பதாகவும் கூறியுள்ளனர். அவளுக்கு ரஹபடோமியாலிசிஸ் (rhabdomyolysis) எனும் நோய் கண்டிருப்பதாகத் தெரிவித்தனர். செயலிழந்து போன தசைகளிருந்த நார்கள் இரத்தத்தில் கலந்ததால் இந்நிலை ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதால் அதிர்ஷ்டவசமாக தாங் உயிர் பிழைத்துள்ளாள். அவளின் தோழிக்கும் இதே நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.