பிரியதர்ஷன் – லிசியின் மகள் கல்யாணி. தெலுங்கில் சில படங்களில் நடித்திருந்த இவர், தமிழில் ஹீரோ படம் மூலம் அறிமுகம் ஆகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி நடிக்கிறார். வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பிரியதர்ஷன், மலையாளத்தில் மோகன்லால் நடிக்கும் மரைக்கார் – அரபிக்கடலிண்டே சிம்ஹம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயின்.
கெஸ்ட் ரோலில் கல்யாணி நடித்துள்ளார். அப்பா இயக்கத்தில் நடித்தது பற்றி கல்யாணி கூறும்போது, ‘அப்பா பிரியதர்ஷன் இயக்கத்தில் நடிக்கும்போது பெரும் படபடப்பாக இருந்தது. மைக்கில் அவர் சத்தம் போட்டால் நான் பயந்துபோய்விடுவேன். அப்பாவிடம் திட்டு வாங்காமல் நடிக்க வேண்டும் என்ற நினைப்பு தொடர்ந்து இருந்தபடியே இருக்கும். கேமரா முன் சின்னதாக செய்யும் தவறை கூட அவர் கண்டுபிடித்துவிடுவார்’ என்றார்.