காஜாங் தமிழ்ப்பள்ளிக்கு சிறப்பு மானியமாக வெ.3 லட்சம்

காஜாங்

காஜாங் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் படைப்பாற்றல் அனைத்துலக ரீதியில் தனி முத்திரையைப் பதித்துள்ளது என்று கல்வி துணை அமைச்சர் தியோ நி சிங் புகழாரம் சூட்டினார்.

பள்ளியின் நூலகம், சுகாதார அறை திறப்பு, மாணவர்கள் உட்பட பள்ளி ஆசிரியர்களுக்கு அங்கீகாரத்துவச் சிறப்பு நிகழ்ச்சிக்கு அவர் தலைமையேற்றார்.
117 வருட வரலாற்றைக் கொண்ட காஜாங் தமிழ்ப்பள்ளி ஆற்றல் மிக்க மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் பள்ளித் தரப்பினரின் அயராத உழைப்பாலும் சிறந்த நிலையை அடைந்துள்ளது.

ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை சுமார் 1,250 மாணவர்கள் பயில்கின்ற காஜாங் தமிழ்ப்பள்ளிக்கு 2019 க்கான சிறப்பு மானியமாக 3 லட்சம் வெள்ளி வழங்கப்படுகிறது.

மாணவர்களின் படைப்பாற்றல் காஜாங் தமிழ்ப்பள்ளிக்கு மேலும் தனி முத்திரையைப் பதித்துள்ளது என்பது சிறந்த சான்று எனஅவர் வர்ணித்தார்.
புத்தாக்கச் சிந்தனையில் வடிவமைக்கப்பட்ட நூலகம், மாணவர்களின் சுகாதார நலனுக்காக நவீன சுகாதார அறையை துணை அமைச்சர் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து அனைத்துலக அளவில் பல துறைகளில் வாகை சூடிய மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சிறப்பு அங்கீகாரப் பரிசுகளை வழங்கினார்.
காஜாங் தமிழ்ப்பள்ளித் தலைமை ஆசிரியர் ஜோன் போஸ்கோ உரையில், பள்ளிக்களுக்கான கல்வி மேம்பாட்டு வளர்ச்சிக்கு வழங்கப்படுகின்ற அரசாங்க நிதியை
மிகச்சிறந்த முறையில் பயன்படுத்தி, பள்ளியின் சுற்றுச்சூழல் சீரமைப்பு, நூலகம், சுகாதார நலனுக்காக சீரமைத்துக் கொடுத்த அனைத்து தன்னார்வலர்களின் சேவையும்
அரசாங்கத்தின் ஆதரவும் மகத்தானது என்று கூறினார்.

பள்ளியின் வளர்ச்சியில் எல்லாக் காலத்திற்கும் தன்னலமற்ற சேவையை வழங்கி வருகின்ற உலு லாங்காட் மாவட்ட கல்வி இலாகா, அதன் பொறுப்பாளர்களுக்கும்
சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளியின் ஒருங்கிணைப்பாளர், பொறுப்பாளர்களுக்கும் துணைத் தலைமையாசிரியர்கள், ஓராங் கோத்தா பாரு சங்கத் தலைவர் டத்தோ ஷேக் அகமட் டூசூக்கி, தொண்டர்மணி டத்தோ ஆ. கணேசன், டத்தோ ராமு,ஆர்.சுப்ரமணியம், ஆர். தியாகராஜன், யூ.பி.எம். பேராசிரியர் டாக்டர் குழந்தையன், பெற்றோர் – ஆசிரியர் சங்கத்தின் தலைவர் எஸ். கங்காதரன்,காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினர் ஆர். தியாகராஜா என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here