இந்நாட்டில் இந்தியர்களின் பொருளாதாரத்தைப் பிற இனங்களுக்கு ஈடாக உயர்த்த மேலும் அதிகமான இந்திய இளைஞர்கள் தொழில் முனைவர்களாக உருமாற வேண்டும் என KLSICCIயின் தலைவர் டத்தோ ஆர். இராமநாதன் வலியுறுத்தினார். அதற்காக இச்சங்கம் பல்வேறு உதவிகளையும் ஆலோசனைகளையும் வழங்க என்றும் தயாராக இருப்பதாக கூறினார்.
இந்நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பி.கே.ஆர். கட்சியின் தலைவரும் போர்ட் டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமும் நீர், நில இயற்கை வள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமாரும் விருதுகளை எடுத்து வழங்கினர்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக புறநகர் மேம்பாட்டு துணை அமைச்சர் ஆர். சிவராசா , பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி, அரசியல் பிரமுகர்கள், இந்திய தொழிலதிபர்கள், தூதரக அதிகாரிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவ்விழாவில் FICCIM எனும் மலேசிய இந்தியர் வர்த்தக சம்மேளனமும் அன்வாரால் தொடக்கி வைக்கப்பட்டது.
1928ஆம் ஆண்டு தோற்றம் கண்டு நாட்டில் மிக பழமையான இந்திய வந்த்தக சங்கமாக திகழும் KLSICCI IR 4.0 எனும் 4ஆவது தொழிற்புரட்சிக்கு இந்திய இளைஞர்களைத் தயார்படுத்த மேலும் ஆக்கப்பூர்வமான பங்கை ஆற்றும் எனும் எதிர்ப்பார்ப்பை ஈடுசெய்ய முயற்சிகள் எடுத்து வருவதாகவும் அதன் தலைவர் இராமநாதன் குறிப்பிட்டார்.