விஜய் தொலைக்காட்சியில் –மிகவும் பிரபலமான சீரியஸ் ‘ராஜா ராணி’. இதில் கணவன் – மனைவியாக நடித்தவர்கள் சஞ்சீவ் – ஆல்யா மானஸா ஜோடி. இந்த ஜோடி.
நிஜ வாழ்க்கையிலும் இருவரும் காதலிக்கத் தொடங்கினார்கள்.தற்போது இருவரும் ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ஆம். ஆல்யாவின் பிறந்த நாளன்று நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டோம். சில பிரச்சினைகளால் எங்களால் அப்போது அறிவிக்க முடியவில்லை. ஆகையால், இப்போது அறிவிக்கிறோம். உங்களுடைய ஆசீர்வாதங்கள் தேவை” என்று கூறியுள்ளார்.