ஏகாதசியன்று அதிகாலையில் விரதம் இருந்து விஷ்ணுவை வழிபட்டு, விஷ்ணு ஆலயத்திற்குச் சென்று, அங்குள்ள சொர்க்கவாசலில் நுழைந்து வந்தால் சிக்கல் தீரும். ரொக்கம் வந்து சேரும். சொர்க்க வாழ்வும் கிடைக்கும்.
எனவே அருகில் உள்ள விஷ்ணு ஆலயத்திற்குச் சென்று, ஏகாதசியன்று அதிகாலையில் விஷ்ணுவை வழிபட்டு, அங்குள்ள சொர்க்கவாசலில் நுழைந்து வந்தால் சிக்கல் தீரும். ரொக்கம் வந்து சேரும். சொர்க்க வாழ்வும் கிடைக்கும்.
இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி, மார்கழி மாதம் 21-ந் தேதி (6.1.2020) திங்கட்கிழமை வருகிறது. மறுநாள் துவாதசியன்று காலையில் பச்சரிசி சாதம் வைத்து, அகத்திக்கீரை, நெல்லிக்காய் சேர்த்த கருணைக்கிழங்கு குழம்பு வைத்து, சூரிய உதயத்திற்கு முன்பே விஷ்ணுவை வழிபட்டு உணவு அருந்துவது நல்லது. மதியம் பலகாரம் சாப்பிடுவதும் நன்மை தரும்