புதிய தோற்றத்தில் பாவனா!

திருமணத்துக்குப் பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்த பாவனா நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் வெளியான 96 படத்தின் கன்னட ரீமேக்கில் மீண்டும் நடித்தார்.

தமிழில் சித்திரம் பேசுதடி, வெயில், தீபாவளி, கூடல் நகர், ஜெயம் கொண்டான், அசல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பாவனா மலையாள பட உலகிலும் முன்னணி நடிகை யாக இருந்தார்.

கன்னட படங்களிலும் நடித்துள்ளார். கன்னட தயாரிப்பாளர் நவீனுக்கும் பாவனாவுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் 2018இல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்த பாவனா நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் வெளியான 96 படத்தின் கன்னட ரீமேக்கில் மீண்டும் நடித்தார்.

இந்த படம் வரவேற்பை பெற்றது. தற்போது வெற்றிகரமாக ஓடிய பஜரங்கி படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகும் பஜரங்கி-2 படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்தத் தோற்றத்தை ரசிகர்கள் பாராட்டியதுடன் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

படத்தின் இயக்குநர் ஹர்ஷா கூறும்போது, பாவனாவை இதுவரை பார்க்காத வித்தியாச மான கதாபாத்திரத் தில் பஜரங்கி-2 படத்தில் பார்க்கலாம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here