ஹோனாலூலு –
அமெரிக்காவின் ஹவாய் தீவில் ஆடவன் ஒருவன் இரண்டு போலீஸ்காரர்களைச் சுட்டுக் கொன்றான். வைக்கி எனும் இடத்தில் அச்சம்பவம் நடைபெற்றது.
ஒரு வீட்டிலிருந்து காவல்நிலையத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட மாது ஒருவர், தாம் கத்திக் குத்துக்கு ஆளாகியிருப்பதாகத் தெரிவித்துள்ளார். உடனடியாக மூன்று காவல்துறை அதிகாரிகள் அந்த வீட்டிற்கு விரைந்துள்ளனர். வாகனத்தை விட்டு இறங்கிய அவர்களை நோக்கி ஜெரி ஹெனல் என்ற ஆடவன் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளான். அதில் இரண்டு அதிகாரிகள் தோட்டா பாய்ந்து இறந்தனர். மற்றொரு அதிகாரி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஹெனல் மரணமடைந்தான்.
அந்த துப்பாக்கிச் சண்டையின்போது அந்த வீடும் அருகில் உள்ள மேலும் ஆறு வீடுகளும் தீப்பற்றின.