மெந்தகாப் –
இந்தியத் தம்பதியரின் கார் தலைகீழாகக் கவிழ்ந்து இருவரும் சொற்ப காயங்களுடன் உயிர் தப்பினர். ஜாலான் துன் ரசாக்-ஜாலான் பெகெலிலிங் மெந்தகாப் மஸ்ஜிட் அருகே இரு கார்கள், நான்கு சக்கர வாகனம் ஆகியவை மோதிக்கொண்ட விபத்தில் இந்தியத் தம்பதியர் பயணம் செய்த நிஸான் அல்மிரா ரகக் கார் தலைகீழாகக் கவிழ்ந்தது.
இவ்விபத்தில் பூபாலா (வயது 33), அவரின் மனைவி, நான்கு சக்கர வாகன ஓட்டுநரான ஆடவர் ஒருவரும் சொற்ப காயங்களுடன் தெமர்லோ பொது மருத்துவமனையில் வெளிநோயாளிகளாகச் சிகிச்சை பெற்றனர் என்று போக்குவரத்து காவல்துறை அதிகாரி இன்ஸ்பெக்டர் புவான் நாடியா கூறினார் .