கோலாலம்பூர் –
சீனா உட்பட உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் ஆட்கொல்லி நோய் என்று கூறப்படும் கொரோனா வைரஸ் எதிரொலியால் 10ஆவது பரா ஆசியான் விளையாட்டுப் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சீனாவில் பரவிய இந்நோயால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டிலும் ஒரு மரணம் பதிவாகியுள்ளது. இதனால் சுற்றுலாதுறை உட்பட அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இம்மாத தொடக்கத்தில் நடத்த திட்டமிடப்பட்ட இப்போட்டி மே 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நிலவரத்திற்கு ஏற்ப போட்டிக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று மலேசியா பரா ஒலிம்பிக் மன்றத் தலைவர் டத்தோஸ்ரீ மெகாட் ஷரிமான் தெரிவித்தார்.