எரிமலை போல நெருப்பைக் கக்கிய மலேசிய அரசியல் கொந்தளிப்பில் அடிபட்டுப் போனது இந்திய சமுதாயம்தான். கடந்த முறை துன் மகாதீர் தலைமையிலான அரசாங்கத்தில் நான்கு இந்தியப் பிரநிதிகள் இருந்தனர். இம்முறை இருவருக்கு மட்டுமே அமைச்சகங்களில் நுழையும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
ஏற்பட்டிருக்கிறதா? ஏற்படுத்தப்பட்டிருக்கிறதா? என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது.
நால்வர் இருந்து சமுதாயத்திற்கு என்னதான் செய்தார்கள் என்ற கேள்வியும் சமுதாயத்தின் ஒரு கோணத்திலிருந்து தூக்கி வீசப்படுகிறது.
சரி…
டத்தோ சரவணன், டத்தோஸ்ரீ எட்மண்ட் சந்தாரா என இருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது
மஇகா என்பதால் டத்தோ சரவணன் சமுதாயம் சார்ந்து குரல் எழுப்புவார் என்ற நம்பிக்கை உள்ளது. இவர் வகிப்பது மனிதவள அமைச்சுக்கான அமைச்சர் பதவி என்பதால் பலவீனமாகிக் கிடக்கும் மலேசிய மனிதவளத் துறையை நிச்சயம் நிமிர்த்திக் காட்ட முனைப்பு காட்டுவார் என்ற நம்பிக்கை உள்ளது.
மற்றொருவர் எட்மண்ட் சந்தாரா
எட்டிய கனியை எட்டிப் பிடிக்க எடுத்த முயற்சியில் முடிந்த வரையில் எகிறிய இவருக்கு கூட்டரசுப் பிரதேச துணையமைச்சர் பதவி கிடைத்திருக்கிறது.
இருவரும் மலேசிய இந்திய சமுதாயம் சார்ந்த ஆர்வத்துடன் செயல்படுவார்கள் என்றே நம்புவோம்
அடுத்த ஆட்சி கவிழ்ப்பு வரை!
மு.ஆர்.பாலு