சமூகச்சேவை பொதுத்தேர்தலை நிர்ணயிக்கும்

சமூகச்சேவை பொதுத்தேர்தலை நிர்ணயிக்கும்

கோலாலம்பூர், மார்ச் 15-

பக்காத்தான் அரசு மீதுகொண்ட கோபத்தின் காரணமே சீன மக்களின் மனமாற்றத்திற்குக் காரணம் என்றாலும் மசீச மக்களுக்கான சேவைகளில் முழுக்கவனம் செலுத்தும் என்கிறார் மசீச தலைவரும் போக்குவரத்துத்துறை அமைச்சருமான வீ கா சியோங் கூறுகிறார்.

தற்போது சீன மக்களிடையே காணப்படும் உணர்வின் வேகம் பொதுதேர்தல் 15வரை தாக்குப் பிடிக்குமா? என்று அவரிடம் கேட்டபோது அவர் இவ்வாறு பதலளிதார்.

மிக முக்கியமானது மக்கள் நலன் என்பதால் இதைச் செய்யக் கடமைப்பட்டிருக்கிறோம். இதனால் வெற்றி பெறலாம். ஒருவேளை தோல்பியடையவும் கூடும். அதற்காக சமூகதிற்கான சேவையிலிருந்து பின் வாங்கிவிட மாட்டோம்.

சீன சமூகத்தைப் பொறுத்தவரை கல்வி, பொருளாதாரம் மிகமுக்கியமானதாக இருக்கிறது. அதில் முழுக்கவனம் செலுத்தப்பட்டு வருவதால் சீன சமூகத்தின் பார்வை மசீச மீது நம்பிக்கையோடே இருக்கிறது.

நான் அனைவருக்கும் பிரதமர் என டான்ஸ்ரீ முஹிடின் யாசின் கூறியிருப்பதைக் கவனைத்தில் கொண்டு மசீச மக்களுக்காகச் செயல்படுவதாக வீ கா யோங் தெரிவித்தார்.

சீன சமூகத்திற்கான குரலாக இருந்தாலும் இங்க உணர்வுடன் செயல்படுவதிலிருந்தும் பின் வாங்க மாட்டோம்.

பேச்சீக்காக மட்டும் அல்ல. வாழ்க்கை முறையும் மலாய் சமூகத்தோடு கலந்த சுழலில் வாழ்ந்த அனுபவத்தால் அவர்களின் விவாத முறையை அறிந்திருக்கிறேன். ஆனாலும் ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்துவதில் தவறியதில்லை.

மலேசிய நாடு இன இணக்கத்திற்கான நாடாக இருக்கவேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையுடன் மசீச வின் சமூகப்பார்வை இருக்கும் என்ற அவர் வரும் பொதுதேர்தலில் நம்பிக்கை விழுக்காடு அதிகரிக்கும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here