மனிதனுக்கு பயமே முதல் எதிரி என்று கேள்விப்பட்டிருந்தாலும் பயப்படாமல் இருந்ததாகக் கேள்விப்பட்டதே இல்லை.
பயமா ? அப்படியென்றால் என்னவெண்று மாவீரன் நெப்போலியன் சொன்னதாக ஒரு கதை உண்டு. அந்த கதை கதையோடு சரி.
நெப்போலியன் காலத்தில் உலகை உலுக்கும் போர் இருந்தது. நாட்டைப் பிடிக்கும் ஆசையில் போர் புரிந்தார்கள். நாட்டை அடிமைப் படுத்தினார்கள். மக்களை அச்சுறுத்தி கப்பம் கட்டச்செய்தார்கள். மக்களிடம் வரி வசுலித்தார்கள். அந்தப் வரிப்பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தார்கள்.
திணவு எடுத்தபோதெல்லாம் நாட்டைப் பிடிக்கக் கிளம்பிவிடுவார்கள். அதுதான் அன்றைய நிலை. இன்றைய நிலை அப்படியில்லை. நாட்டைப் பிடிக்கத்தேவையில்லை. நாட்டை அழிக்க படைகள் தேவையில்லை.ஆயுதங்கள் தேவையில்லை. தொற்றுநோய் பரப்பினாலே போதும் கதை 19 நிலைமையும் அதுதான். ஏதோ ஒரு நாடு, அதிகார வெறிகொண்டு, அப்பாவி மக்களை அழிக்க திமிர் கொண்டு செய்த காரியத்தால், உலகம் அழிவை நோக்கித் திரும்பியிருக்கிறது.
இதனால் யாருக்குப்பயன்? பயன் இல்லாமல் செய்வார்களா?
அவர்கள் ஒன்றை மறந்துவிட்டனர் போலும். உணவு இல்லையென்ற நிலை ஏற்படுமானால் திமிர் பிடித்தவனும் மண்ணுக்குள்ளேதான் என்பதை மறந்தா போய்விட்டான்!
உண்மையான வீரன் எதிர்கொண்டு மோதுவான். பயந்து சாகின்றவனே நோய்பரப்பும் வேலைகளைச்செய்வான். மறைந்திருந்து தாக்குவான். இன்று அதான் நடக்கிறது.
அணு ஆயுதப்போரைவிட கொடுமையான காரியத்தால் கொரோனா 19-இன் பிடியில் சிக்கியிருக்கிறோம். இதனை எதிர்கொண்டு சமாளிக்கும் ஆற்றல் ஆற்றலை மலேசிய நாடு இழந்துவிடவில்லை. சமாளிப்புக்காக பல வகையில் அரசாங்கம் முயன்று வருகிறது.
இதற்கு, பயத்திலிருந்து நீங்கியவர்களாக முதலில் மக்கள் இருக்கவேண்டும். முண்டியடித்துக்கொண்டு பேரங்காடிகளைக் காலி செய்துவிடக்கூடாது.
மக்களின் அத்தியாவசிய பொருட்கள் பேரங்காடிக் கடைகளில் இருக்கின்றன. பணம் இருந்தால் வாங்கிக் கொள்ளலாம். முடியும். ஆனால், பொருட்கள் முடிந்துபோகும் அளவுக்கு வாங்கிக்கொண்டால் அப்பொருட்கள் வாழ்நாள் வரி தாக்குப்பிடிக்குமா?
அப்பொருட்களின் காலக்கெடு முடிந்த்துவிட்டால் பயன் படுத்தவும் முடியாது.
இதற்குக்காரணம் பயம். இந்தப்பயமே உயிரை எடுத்துவிடும். ஊனவுப்பொருட்கள மற்றவர்களுக்கும் பயன் படவேண்டும்.
மற்றவர்களும் வாழவேண்டும் என்று எண்ணாமல் அள்ளிக்குவிக்கும் அர்ப்ப எண்ணத்தால் கொரோனாவை விரட்டத்தான் முடியுமா?
அரசாங்கத்தின் உதவியில்லாமல் துரும்பைக்கூட அசைக்க முடியாது என்றிருக்கும்போது, பதட்டமில்லாமல் இருந்தாலே போதும் வழி கிடைத்துவிடும்.
கொரோனா 19 உயிரைப்பறிக்கவல்ல கொடுமையான நோய்தான். ஆனால் ஏற்றத்தாழ்வு, சாதிமதம். பிரிவினை பற்றியெல்லாம் கொரோனாவுக்குத் தெரியாது. சமத்துவம் கற்றுக் கொடுத்துக்கொண்டிக்கும் கொரோனாவுக்கு ஒருவகையில் நன்றி கூறினாலும் துன்பம் தந்தது போதும் என்று கைகூப்பி வழியனுப்ப அனைவருமே பாடுபடவேண்டும் என்ற பாடத்தைக் கற்றுக்கொள்ளும் நேரத்தில், அரசியல் பேதம் வேண்டாம். அமைதியும் தனிமையும் சுகாதாரமும் வேண்டும்.