போரிடும் உலகை வேருடன் சாய்ப்போம்

போரிடும் உலகை வேருடன் சாய்ப்போம்

ஷா ஆலம், மார்ச் 17-

போரிடும் உலகை வேருடன் சாய்ப்போம் என்ற சித்தாந்தத்தைக் கொண்டு செயலில் இறங்கியிருக்கிறது சிலாங்கூர் மாநில அரசு.

கோவிட் 19 மாநில பிரச்சனை அல்ல. மலேசிய மக்களுக்கான பிரச்சனை.ஆனாலும் மாநிலங்களுக்கென செயல் நடவடிக்கைகள் மக்கள் பிரச்சனைகளுக்கு இலகுவான வழியை ஏற்படுத்தும்.

இதை சிலாங்கூர் மாநில அரசு அதன் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமையில் நடவடிக்கைக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

கோவிட் பிடியிலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும். அதற்குத் தீவிர நடவடிக்கை அவசியம். மாநிலத்தின் பொருளாதாரமும் வலுவாக இருக்கவேண்டும் என்ற கோரிக்கையை சுங்கைபீலே தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ரோனி லியூ தெரிவித்திருக்கிறார்.

மோசமான சூழல் மாறவேண்டுமானால் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பாகுபாடுன்றி களத்தில் இறங்கவேண்டும் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here