ஜீவி காத்தையா – போராட்டவாதியை நாடு இழந்தது

50 ஆண்டுகளுக்கு மேலாக பத்திரிகை மற்றும் அரசியல் துறையில் பெயர் பதித்து வந்த ஜீவி காத்தையா இயற்கை எய்தினார். அவருக்கு வயது 82. மூத்த தொழிற்சங்கவாதிகளில் ஒருவரான இவர் மலேசிய நாடாளுமன்ற பதவிக்கான பொதுத் தேர்தலில் களம் இறங்கியவர்.

சில மாதங்களுக்கு முன் நோய்வாய்ப்பாட்டு இருந்த இவர் சிகிச்சை பலனளிக்காமல் இயற்கை எய்தினார். பத்து ஆராங்கில் 1938ஆம் ஆண்டு பிறந்த இவர் தனது ஆரம்ப கல்வியை பத்து ஆராங் தமிழ்ப்பள்ளியிலும் உயர்கல்வியை கோலாலம்பூர் மகாத்மா காந்தி பள்ளியில் பயின்றார். பட்டப்படிப்பை லண்டனில் பயின்றவர் ஜீவி காத்தையா.

1964ஆம் ஆண்டு தோட்ட தொழிலாளர்களின் நலன் கருதி தோட்ட சிப்பந்திகள் சங்கம் உருவாக காரணமாக இருந்தவர். அதன் பின் சில ஆண்டுகளுக்கு பின் அச்சங்கத்தின் பொது செயலாளராக இருந்தவர். தோட்ட தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளுக்காக போராடியவர்.

தனது மேடை பேச்சினால் மலேசிய மக்களின் நினைவில் நின்றவர்; எப்பொழுதும் நிற்பவர். இவர் செம்பருத்தி.காம் உள்ளிட்ட இணைய பத்திரிகைகளில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். குறிப்பாக பாமர மக்களின் நலனுக்காகவும் சம உரிமைக்காகவும் போராடிய ஒரு போராட்டவாதியை நாடு இழந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here