பொது இடத்தில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய நபர் – செராசில் பரபரப்பு

(எல்.கே.ராஜ்)

கோலாலம்பூர், மார்ச்,

மாதாந்திர வங்கிக் கடன் பாக்கி செலுத்தப்படாததைத் தொடர்ந்து, நபர் ஒருவரின் காரை இழுக்கச் சென்ற 34 வயது இந்திய ஆடவரிடம் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தினார் ஆடவர் ஒருவர்.

செராஸ் பண்டார் துன் உசேன் ஓன் பகுதியில் மலாய் மாது ஒருவரின் வாகனத்தை இழுக்க வந்த அந்த 34 வயது ஆடவரை நோக்கி துப்பாக்கியை நீட்டி இருக்கிறார் அந்தப் பெண்ணின் தந்தை என்றறியப்படும் 60 வயது முதியவர்.

ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்துவிடும் என்ற அச்சத்தில் அந்த இந்திய ஆடவரும் அவரின் நண்பரும் அங்கிருந்து விரைந்து அகன்று சென்றுவிட்டனர். பொது இடத்தில் அந்த நபர் துப்பாக்கியை நீட்டி மிரட்டிய சம்பவம் செராஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் தொடர்பில் காஜாங் காவல் துறையினரிடம் இரு தரப்பினருமே புகார் செய்தனர். தமது துப்பாக்கிக்கு லைசென்ஸ் இருப்பதாக அந்த ஆடவர் புகாரில் குறிப்பிட்டிருக்கிறார். அவரிடம் விசாரணை நடத்திய காவல் துறையினர், அந்தத் துப்பாக்கியை விசாரணைக்காக பறிமுதல் செய்தனர்.இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் புலன் விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் முகம்மட் தஸ்னிம் முகமட் நோரை 014-6209960 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விவரம் தெரிவிக்கலாம். – களத்திலிருந்து நேரடி தகவல் எல்.கே.ராஜ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here