சொந்த ஊர் பயணம் சுகமானதல்ல

மலாயா பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் அடிபா கமாருல் ஜமான்.

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 18-

விடுமுறை ஆனந்தமானது அல்ல. ஆதலால் சொந்த ஊர்களுக்குச்செல்லும் அவசியத்தை குறைந்துக்கொள்வது நல்லது என்று அறிவிரை கூறப்பட்டிருக்கிறது.
விடுமுறையின் நோக்கமே கொரோனா 19 தடுப்பு என்பதாக இருக்கும்போது, தெரியாமலேயே தொற்றுக் கடத்தல் அல்லது தொற்றில் சிக்கிக்கொள்வது, அல்லது பரவவிடுதலுக்கு ஆளாவது கூடாது என்பதால் பாலிக் கம்போங் தவிர்க்கப்படவேண்டும் என்று அலோசனை வழங்கப்பட்டிருக்கிறது.

சொந்த ஊருக்குச் செல்வது சீசுகமானதல்ல என்பது மட்டும் நிச்சயம் என்கிறார் மலாயா பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் அடிபா கமாருல் ஜமான்.

தொற்றைக் குறைப்பதற்கான இடைவெளி என்பதாக மட்டும் இதைக் கருதுதல் வேண்டும். இது நிரந்தரம் அல்ல. இடைவெளி பாதுகாப்புக்கானது என்று கருதினால் இடைவெளி பாரமாக இருக்காது.

தொற்று நோய்கள் தடுப்புச்சட்டம் 1988, போலீஸ் சட்டம் 1967 ஆகியவையின் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார் இவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here