ரோம் –
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை உலகளவில் 8,944ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,18,766 ஆக உயர்ந்துள்ளது. அதில் 84,386 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 475 பேர் கொரோனா வால் உயிரிழந்தனர்.
இதனையடுத்து அந்நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,978 ஆக அதிகரித்துள்ளது.
இத்தாலியில் 35,713 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 4,025 பேர் சிகிச்சைக்குப் பின் குணமடைந்துள்ளனர். சீனாவில் 3,237 பேர், ஈரானில் 1,135 பேர், ஸ்பெயினில் 638 பேர், அமெரிக்காவில் 151 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.