மரணக் கூத்து

அடங்கி நடந்தால் ஆபத்திலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்

                      அடங்கி நடந்தால் ஆபத்திலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.                           இல்லையேல் அடக்கப்படுவீர்கள்

அடங்கவில்லை என்றால் அடக்கப்படும் என்பது பொதுவான விதி. அடக்கபடுவதற்குமுன் அடங்கிவிடுவது அறிவுடைய செயல். இதுதான் இன்றைய பேச்சு.

இன்றைய நிலையில் மலேசிய மக்களில் பெரும்பான்மையினர் அடங்காதவர்களாகத்தான் இருக்கிறார்கள் என்பது வெறும் கூற்றல்ல. வெளிப்படையான உண்மை.

கொரோனா 19 கும்மியடிக்கும் கருவியல்ல. கொலைக்கிருமித் தொற்று. இதில் சிக்குவதும் உயிர் பிழைப்பதும் ஆண்டவன் கையில் இல்லை. மருத்துவர்களின் கைகளில் இருக்கிறது. எல்லாம் ஆண்டவன் பார்த்துப்பான் என்று இருந்துவிடவே முடியாது.

நாட்டின் சட்டத்தால் ஆலயங்களுக்குச் செல்வதிலும் வழிபாடுகள் செய்வதிலும் சிரமங்கள் இருக்கின்றன. ஆண்டவனிடம் கேட்டால் மருத்துவர்கள் சொல்வதை அனுசரியுங்கள், சட்டத்தை மதியுங்கள் என்றுதான் கூறுவார்.

சட்டத்தை மதித்துப் பின்பற்றுவது என்பது ஆண்டவனுக்குக் கொடுக்கும் மரியாதையாகக் கருத்தப்படுகிறது. மன்னருக்குக் கொடுக்கும் மரியாதையும் ஆண்டவனுகுரியதாகவே மதிக்கப்படுகிறது.

இன்றைய அபாய நிலையச் சமாளிக்க அடங்கவேண்டும் என்பதுதான் முக்கியம். இதைப் புரிந்துகொள்ளாமல் எரிந்து விழுவதில் எந்த நன்மையும் இல்லை. மக்களைக் காக்கும் பொறுப்பு அண்டை வீட்டுக்காரருக்கு இல்லை. அரசுக்கு அதிகமாக இருக்கிறது. அரசிடம் சண்டைபோடாலம். அதில் ஆத்மார்த்த அர்த்தம் இருக்க வேண்டுமல்லவா!

இன்றைய நிலைதான் என்ன? கொரோனா 19 அல்லது கோவிட் 19 என்பது கொலைகாராத்தொற்று நோய். எங்கிருந்தோ ஏவப்பட்டதில் மலேசிய மக்கள் பலிகடா ஆகிவிட்டனர். மலேசிய மக்கள் மட்டுமல்ல. நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் கோவிட் 19 மரணக்கூத்தாடுகிறது.

மலேசியாவில் இத்தொற்றுக்கு 900 பேர் பாதிக்கப்படிருக்கின்றனர். பள்ளிவாசல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களால் இத்தொற்று அதிகரிக்கக்காரணம் என்கிறார்கள். அவர்களில் 4,000 பேர் தாமே முன்வந்து பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டால் நிலைமை மோசமாகாமல் இருந்திருக்கும். பரிசோதிக்கொள்ள மறுத்து அடம்பிடிப்பதில் பேராபத்து கைக்கெட்டிய தூரத்தில் கைகொட்டிச் சிரிக்கிறது.

ஆபத்து காலத்தில் ஒருங்கிணைந்த பாதுகாப்பு முறையைப் பின் பற்றறுவதே அதி புத்திசாலித்தனமாகும். அடம்பிடிப்பதில் எந்த நியாயமும் இல்லை.

கொரோனா 19 பேச்சு விஸ்வ ரூபம் எடுக்கத் தொடங்கியதற்குப் பின்னால்தான் அப்பள்ளிவாசல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான வருகையாளர்களை முழுமையாகப் பரிசோதித்திருந்தால் ஆபத்தான கட்டத்திற்கு ஆளாகியிருக்க மாட்டோம். பொறுப்பற்ற தன்மையால் இந்தப்பாதிப்புக்கு அளாகிவிட்டோம்.

இப்போது அப்பாவி மக்களுக்கும் ஆபத்தாகிவிட்டது. அழுது புலம்புவதற்குள் அடங்கி நடந்தால் ஆபத்திலிருந்து தற்காத்துக் கொள்ளலாம். இல்லையேல் அடக்கப்படுவீர்கள் என்ற நிலைக்குத் தள்ளப்படுவீர்கள் என்று எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.

திமிரைக்காட்டும் நேரம் இதுவல்ல. கொரோனாவைக் கட்டுப்படுத்த அரசு காட்டும் வழியில் சென்றால் ஆபத்திலிருந்து தப்பலாம்.

நாட்டின் பாதுகாப்புக்கு இடையூறு செய்யாமல் மக்கள் உதவவேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here