போஸ்டர் அடி.. அண்ணன் ரெடி! விஜய் மாணவர்களை சந்திப்பது எப்போது?

சென்னை: அரசியல் சினிமா என தற்போதைக்கு இரு குதிரைகளில் பயணித்துக் கொண்டிருக்கும் நடிகர் விஜய், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை சந்திக்க இருக்கிறார். இதற்கான பாஸ் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் ஜூன் இரண்டாவது வாரத்தில் நிகழ்ச்சி நடைபெறும் என்கின்றனர் விஜயின் தவெக நிர்வாகிகள்.

தமிழ் திரையுலகில் முன்னணி நாயகனாக வளம் வரும் விஜய் தற்போது அரசியல் கட்சியை ஆரம்பித்து அடுத்த கட்ட நடவடிக்கைக்காக காத்திருக்கிறார். தற்போது தி கோட் படத்தின் போஸ்ட் புரடெக்சன் பணிகளோடு கட்சி பணிகளையும் கவனித்து வருகிறார்.

நடிகர் விஜய்: அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே பல ஆண்டுகளாக தனது ரசிகர் மன்றங்கள் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை விஜய் வழங்கி வந்திருக்கிறார். 2011ம் ஆண்டுக்குப் பிறகு அவரது ரசிகர் மன்றங்கள் விஜய் மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டது. மக்கள் இயக்கத்திற்கான கொடி உள்ளிட்டவை அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து அவ்வப்போது ஆலோசனை கூட்டங்களை நடத்தி வந்த விஜய் தற்போது தனது அரசியல் வருகையை உறுதி செய்திருக்கிறார். தமிழக வெற்றிக்கலகம் எனும் கட்சியை ஆரம்பித்து அது 2026 தேர்தலில் களமிறங்கும் என்பதை உறுதி செய்திருக்கிறார்.

மாணவர்கள் சந்திப்பு: விஜய் விஜய் பொருத்தவரை தமிழக முழுவதும் நன்கு தெரிந்த நபர் விஜயகாந்த்-க்கு அடுத்து அரசியலில் பெரிய அளவில் விஜய் சாதிப்பார் என்கின்றனர் அவரது ரசிகர்கள். பெண்கள் குழந்தைகள் குறிப்பாக இளைஞர்கள் மாணவர்கள் இடையே விஜய்க்கு செல்வாக்கு இருக்கிறது. அவர்களை குறி வைத்து விஜய் தனது காய்களை நகர்த்தி வருகிறார். அந்த வகையில் கடந்த 20223 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை விஜய் சந்தித்தது அப்போதைக்கு ஊடகங்களில் பேசுபொருளானது.

இந்தாண்டும் சந்திப்பு: 234 தொகுதிகளில் இருந்தும் பத்தாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களும் 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களையும் அவர்களது குடும்பத்தினரும் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களின் போக்குவரத்து செலவு உணவு தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை ஏற்றுக்கொண்டனர். காலையிலிருந்து இரவு வரை ஒவ்வொரு மாணவி, மாணவிகளுக்கும் தன் கையாலேயே பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கிய விஜய் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

விஜய் உற்சாகம்: கிட்டத்தட்ட 11 மணி நேரம் எந்தவித முக சுளிப்பும் இன்றி மகிழ்ச்சியோடு விஜய் மாணவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதனால் இளைஞர்களின் பார்வை விஜய் பக்கம் திரும்பியது. மேலும் அந்த நிகழ்ச்சி பெருவெற்றி பெற்றதால் விஜய் தரப்பு மகிழ்ச்சி அடைந்தது. குறிப்பாக இது இளம் தலைமுறை வாக்காளர்களை விஜய் பக்கம் வரவழைக்கும் என்பதால் வருடம் தோறும் இதே நிகழ்ச்சியை நடத்த விஜய் மக்கள் இயக்கத்தினர் திட்டமிட்டனர்.

மாணவர்களுக்கு பாஸ்: இதையடுத்து இந்த ஆண்டும் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என விஜய் ஏற்கனவே கட்சியினருக்கு உத்தரவிட்டிருந்தார். இதை அடுத்து 234 தொகுதிகளிலும் இரு பொது தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களை அடையாளம் காணும் பணி கடந்த வாரமே நிறைவு பெற்றது. இதையடுத்து அவர்களுக்கு தற்போது ‘பாஸ்’ வழங்கப்படுகிறது. இந்த பாஸை காண்பித்தால் மட்டுமே நிகழ்ச்சி நடைபெறும் திருமண மண்டபத்திற்குள் அனுமதிக்கப்படுபவர் என கூறியுள்ளனர் விஜய் கட்சி நிர்வாகிகள்.

ஏற்பாடுகள் தீவிரம்: தற்போது இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில் மாணவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பிரபல கேட்டரிங் நிறுவனத்திடம் மாணவர்களுக்கு உணவு வழங்க ஆர்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த முறை போலவே பலதரப்பட்ட உணவு வகையில் வழங்கப்பட இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளையும் தமிழக வெற்றிக் கழகத்தினர் செய்து வருகின்றனர்.

எப்போது நிகழ்ச்சி: இந்நிலையில் ஜூன் முதல் வாரத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பதால் அதற்கடுத்து ஜூன் இரண்டாவது வாரம் அதாவது 15ஆம் தேதியிலிருந்து 20ஆம் தேதி உள்ளாக மாணவர்கள் சந்திப்பை விஜய் வைத்துக் கொள்ளலாம் என திட்டமிட்டு இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் போலவே இந்த முறையும் நிகழ்ச்சி சிறப்பாக இருக்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு விஜய் தரப்பிலிருந்து உத்தரவு பறந்து இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here