தப்புக் கணக்கு

சாலை அமைதிக்கு ஏதொ காரணமல்ல. கொரோனா 19 தான் காரணம். நாட்டை உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா 19 மக்களின் சுறுசுறுப்பைப் பறித்திருக்குகிறது. வேகத்தைப் பறித்திருக்கிறது நிம்மதியைப் பறித்திருக்கிறது. அனைத்தையும் கெடுத்துக் கொண்டிருக்கிறது.

வருகை நல்வரவாகட்டும் என்று யாரையும் அழைக்க முடியாத அளவுக்கு மனித அன்புக்கு கோடு போட்டு வைத்துவிட்டது கொரோனா 19. இது லெட்சுமணன் சீதைக்குப் போட்ட கோடு அல்ல.

யாரோ எய்த அம்பு பலவாய் பிரிந்து, மலேசியவுக்குள்ளும் நுழைந்து, நாட்டின் அமைதியைக் கெடுத்துவிட்டது. அன்றாட இயல்பு வாழ்க்கை சீர்குலைந்துவிட்டது.

சாலை ரவுடித்தனங்களாலும் கொரோனாவிடம் மோத முடியவில்லை. இதற்கு டச் அண்ட் கோ அட்டை யார் கொடுத்தது என்றும் தெரியவில்லை.

டோல் கட்டாமல் உள்ளே நுழைந்திருக்கிறது கொரோனா 19. உள்ளே நுழைவதைத் தடுக்கும் சக்தி மக்களிடம் இருக்கிறது. மக்கள் நினைத்தால் அதை செய்ய முடியும். ஆனால் அசட்டை அதிகமாக இருக்கிறது. அசட்டையின் சட்டை கிழித்தெறியப்படவேண்டும்.

சாலைப் பயணத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. தனிமையாக இருப்பது இன்னும் நல்லது. மொத்தத்தில் வெளிநடவடிக்கைகளை நிறுத்திக்கொள்வது மிகமிக நல்லது.

கொரோனா 19 தனியாகச்செல்ல முடியாது. மனிதர்களைத் தொற்றிக்கொண்டுதான் பயணிக்கும். அது யாரையெல்லாம் தொற்றிக்கொள்ளும்? பலவீனமானவர்களை தொற்றுக்கு நிரம்பப் பிடிக்கும்.

எல்லை தாண்டி வருகின்றவர்களை வரவேற்பு தூபி தடுத்து நிறுத்தாது. அதற்கு வரவேறகத்தான் தெரியும். ஆனாலும் டோல் சாவடியில் தடுத்து நிறுத்தலாம். ஆனால் அங்கே வெப்பக் கருவிகள் இல்லையே!

எந்த மனிதரிடம் தொற்று இருக்கிறது என்று டோல்சாவடியில் கண்டுபிடிக்கமுடியாது. இப்படித்தான் நாட்டின் நுழைவாயில்களில் கோட்டை விட்டதால் இறப்பு 10 எண்ணிக்கைவரை உயர்ந்து விட்டது. 1,306 பேருக்கு கொரோனா 19 என்று இன்று உயர்ந்திருக்கிறது.

ஸ்ரீ பெட்டாலிங் தாப்ளிக் ஒன்றுகூடலில் கலந்துகொண்டவர்கள் 500 பேர் மட்டுமே சோதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் கூற்றின்படி இன்னும் 12 ஆயிரம்பேர் முன்வரவில்லையா? அவர்களிடம் போதுமான பத்திரங்கள் இல்லையாம்.அதனால் அஞ்சுகிறார்கலாம்.

அவர்கள் பத்திரமாக இருக்க பரிசோதனை அவசியம் என்பதை தப்ளிக் ஏற்ப்பாட்டாளர்கள் முன்வரவேண்டும். இல்லையென்றால் அனைத்தும் தப்புக்கணக்கில் பதிவாகிவிடும். அதனால் பாதிப்பு உயர்ந்துகொண்டே போகுமே. என்ன செய்யப் போகிறார்கள். மதியாதவர்கல் யார்? மக்களா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here